உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ஆண்டு முழுவதும் மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் மேலாண்மை பற்றி பொதுமக்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரையில் மழை இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.
உலகுக்கே நீர் மேலாண்மையை சொல்லிக் கொடுத்தவர்கள் தமிழர்கள். காலப்போக்கில் மக்கள் தொகை அதிகரிப்பு, கட்டிடங்கள் கட்ட காடுகள், மரங்களை அழித்த தாலும், வாகனப் பெருக்கம், தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஆறுகள், ஏரிகள் மாசடைந்து சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால், மழையளவு குறைந்து 10 அடி, 14 அடி ஆழத்தில் கிணற்றில் கிடைத்த தண்ணீரை, தற்போது 1,000 அடி, 1,500 ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து தண் ணீரை பெறுகிறோம்.
கோடை காலத்தில், ஆழ்துளை தண்ணீரும் கிடைக்காமல், லாரி யில் வரும் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீப காலமாக தண்ணீர் சிக்கனம், மழைநீர் சேகரி ப்பு, மரக்கன்றுகள் நடுவது பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் பரவலாக ஏற்பட்டு வருகிறது. நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மதுரை திருப்பாலை தாகூர் நகரில் ரெயின் ஸ்டாக் என்ற அமைப்பை நடத்தும் இளைஞர்கள், தென் தமிழகத்திலேயே முதன் முறையாக மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் சிக்கனம் பற்றியும், முன்னோர்களின் தண்ணீர் மேலா ண்மை மரபுகளை மீட்டெடுக்கவும் மழை இல்லம் தொடங்கி உள்ளனர்.
இந்த மழை இல்லத்தில் நிரந்தரமாக மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் மேலாண்மை மற்றும் மழையளவு உள்ளிட்ட மழையைப் பற்றிய விளக்கங்கள், தகவல்கள், செயல்முறை பயிற்சிகளை ஆண்டு முழுவதும் வழங்க திட்டமிட்டுள்ளனர். மாணவ, மாணவிகள். மழை இல்லத்தை பார்வையிட்டு மழை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெயின் ஸ்டாக் அமைப்பை சேர்ந்த அரவிந்த் வெங்கடசுப்பிரமணியன் கூறிய தாவது:
வீடுகள், கல்லூரிகள், தொழிற் சாலைகளில் மழைநீர் சேமிப்பு, கழிவுநீரை மறு சுழற்சி செய்து வருகிறோம். மாணவர்கள், பொதுமக்களிடம் நீர் மேலாண்மை விழிப்புணர்வை ஏற்படுத்த, மழை இல்லம் தொடங்கி உள்ளோம். இந்த மழை இல்லம் மழைநீர் சேமிப்பு தொடர்பான தகவல் மையமாக செயல்படும். நீர் சேமிப்பு பற்றிய நேரடி விளக்க கண்காட்சி நடத்தப்படுகிறது. முன்பு எல்லோர் வீட்டிலும் இருந்த வட்டக் கிணறு இங்கு இருக்கிறது. இந்த கிணற்றில் 14 அடியில் நீர் கிடைக்கிறது.
ஆயிரம் சதுர அடி பரப்பு வீட்டுமாடி, சராசரியாக ஓராண்டில் 2,700 கன அடி மழைநீரை சேமிக்கும். அது கிட்டத்தட்ட 76 ஆயிரம் லிட்டர் நீருக்கு சமமானது. இந்த கட்டிடங்களில் மழை நீரை எந்தெந்த வழிகளிலெல்லாம் சேகரிக்கலாம் என்பது பற்றியும் சொல்லிக் கொடுக்கிறோம் என் றார்.