தமிழகம்

5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைத் தொடர்ந்து நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே நிலையில் உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காற்றின் உந்து சக்தி குறைவாக இருந்ததால் அது காற்றழுத் தாழ்வுப் பகுதியாக மாறவில்லை.

இருப்பினும், தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் தற்போது வரை தூத்துக்குடியில் 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்த் தற்போது நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை நவம்பர் 26 ஆம் தேதி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், தென்காசி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மதுரை, ராமநாதபுரம், திருவாரூர், சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT