பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் (நிதி) மற்றும் நிறுவன செயலாளர் டி.டி.ரங்கசுவாமி (வயது 97) நேற்று அதிகாலை காலமானார்.
சுந்தரம் பைனான்ஸ் நிறுவனர் டி.எஸ்.சந்தானம் அழைப்பின்பேரில் மும்பையில் இருந்து சென்னை வந்த டி.டி.ரங்கசுவாமி, சென்னை பாடியில் தொடங்கப்பட்ட லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் 1960-ம் ஆண்டு நிதித்துறையில் தலைமை பதவி வகித்தார்.
பின்னர், டி.எஸ்.சந்தானத்தின் ஆலோசனையின்படி 1963-ம் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிதிதுறையில் தலைமை பதவிக்கு சென்றார். ஓய்வுபெறும் வரை நிறுவனத்தின் நிதித்துறையில் பணியாற்றினார். நிறுவனத்தின் செயல் இயக்குநர் (நிதி) மற்றும் நிறுவன செயலாளராகவும் பதவி உயர்வு பெற்றார். டிவிஎஸ் குழுமத்தின் பிரேக்ஸ் இந்தியா, லூகாஸ் டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாக டி.டி.ரங்கசுவாமி பணியாற்றியுள்ளார். அவரது இறுதி சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றது.
அவருக்கு விமலா என்ற மனைவியும், டி.டி.நரேந்திரன் (சென்னை ஐஐடி முன்னாள் பேராசிரியர்). டி.டி.சீனிவாச ராகவன் (சுந்தரம் பைனான்ஸ் முன்னாள் நிர்வாக இயக்குநர்) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.