இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாட்டுப்படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் வியாழக் கிழமை கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதி காலை பாம்பனைச் சேர்ந்த நாட் டுப்படகு மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டி ருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி இருதயராஜ், அமல்தாஸ், அந் தோணிசாமி ஆகிய 3 பேருக்குச் சொந்தமான நாட்டுப்படகுகளைக் கைப்பற்றி அதிலிருந்த 23 பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களை சிறை பிடித்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து இலங்கை யில் சிறை வைக்கப்பட்டு உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய் யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர் கள் கடந்த 4 தினங்களாக கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதே கோரிக்கைகளை வலி யுறுத்தி வியாழக்கிழமை நாட்டுப் படகு மீனவர்கள் பாம்பனில் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் நடை பெற்றது.
இந்தப் போராட்டத்தில் தமிழ் நாடு மீன்பிடி தொழிலாளர் கூட்டமைப்பு (சிஐடியூ) மாநில செயலர் செந்தில்வேல், நாட்டுப் படகு மீனவ சங்கத் தலைவர்கள் அருள், ராயப்பன், ஞானசிலன் மற்றும் நூற்றுக்கணக்கான மீனவர் கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மேலும் பாம்பன், ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வில்லை.