தங்க நகைகளுக்கு விதிக்கப் பட்டுள்ள கலால் வரியை ரத்து செய்யக்கோரி, நகைக்கடை உரிமையாளர்கள் 2வது நாளாக நேற்று காலவரையற்ற கடை யடைப்பு போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் நகைக்கடைகள் மூடப்பட்டிருந்தன.
மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரூ.2 லட்சத்துக்கும் மேல் நகை வாங்குவோருக்கு ஒரு சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த நகைக்கடை உரிமையாளர்கள், கலால் வரியை ரத்து செய்யக்கோரி கடந்த 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் ரூ.1,400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் கடந்த 6, 7-ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையே, மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்விய டைந்ததால் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் நடத் தப்படும் என மீண்டும் அறிவிக்கப் பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் காலவரையற்ற கடை யடைப்பு போராட்டம் தொடங் கியது. ஆனால், ஒரு சில இடங் களில் நகைக்கடைகள் திறந்தி ருந்தன. நேற்று காலவரையற்ற போராட்டம் முழுவீச்சில் நடந்தது. நாடு முழுவதும் 2 லட்சம் கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 35 ஆயிரம் நகைக்கடைகள் மூடப்பட்டன.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “தங்க நகைகளுக்கு விதிக்கப் பட்டுள்ள ஒரு சதவீத கலால் வரியை நீக்கக் கோரி ஏற்கெனவே தொடர்ந்து 4 நாட்கள் நாடு முழுவதும் கடை யடைப்பு போராட்டம் நடத்தி னோம். இதனால், எங்களுக்கு ரூ.1,400 கோடி வர்த்தகம் பாதிக் கப்பட்டது. வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில்கொண்டு 6, 7-ம் தேதிகளில் கடைகளை திறந்தோம். இதற்கிடையே, மத்திய அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, எங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் வகையில் தொடர்ந்து காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.