தமிழகம்

பெரியார் ஆரம்பத்திலிருந்தே தலித் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டார்: எச்.ராஜா விமர்சனம்

செய்திப்பிரிவு

பெரியார் ஆரம்பத்தில் இருந்தே தலித் மக்களுக்கு விரோதமாக செயல்பட்டார். அது மறைக்கப்பட்டு வந்தது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது:

''மக்கள் நலக் கூட்டணி அறிவித்த போதே அதாவது எட்டு மாதங்களாகவே இந்தக் கூட்டணி தேர்தல் வரை கூட தாக்கு பிடிப்பது சந்தேகம் என்று சொல்லி வருகிறேன். வைகோ இருப்பதால் மக்கள் நலக் கூட்டணி தேர்தல் வரை இருக்காது என்று உறுதியாக நம்பலாம்.

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியார் ஆரம்பத்தில் இருந்தே தலித் மக்களுக்கு விரோதமாக இருந்தார். அது மறைக்கப்பட்டு வந்தது என்பது என் கருத்து'' என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

          
SCROLL FOR NEXT