பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐந்தாவது நாளான நேற்று வேதியியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.
வேதியியல் தேர்வெழுதிய மாணவ-மாணவிகள் கூறும் போது, “வினாக்கள் சற்று கடின மாகவே இருந்தன. குறிப்பாக, 3 மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண், 10 மதிப்பெண் வினாக்களும் கடினமாகத்தான் இருந்தன. பாடத்திட்டத்தை தாண்டி வினாக்கள் கேட்கப்பட வில்லை என்றாலும் பாடத்தில் கடினமான கேட்டுவிட்டனர். வழக்கமாக கேட்கப்படும் முக்கிய மான கேள்விகள் இடம்பெறாதது ஏமாற்றம் அளித்தது” என்று தெரிவித்தனர்.
சென்னையில் ஒருசில தேர்வு மையங்களில் தேர்வறையை விட்டு வெளியே வந்த மாணவி கள் தேர்வு கடினமாக இருந்ததால் கண்ணீர் வடிந்தபடி வந்த காட்சி சங்கடம் அளிப்பதாக இருந்தது. அதேநேரத்தில், கணக்குப்பதி வியல் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ-மாணவி கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
வேதியியல் தேர்வெழுதிய பெரும்பாலான மாணவ-மாணவி கள் தேர்வு கடினமாக இருந்ததாக கூறுவதால், இந்த ஆண்டு மருத்துவம், பொறியியல், விவசாயம் உள்ளிட்ட தொழிற் கல்வி படிப்புகளுக்கு கட் ஆப் மதிப்பெண் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு கணித தேர்வும் கடினமாக இருந்ததாக தேர் வெழுதிய மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.