தமிழகம்

பொய்யான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பவேண்டாம்: மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஏதேனும் வேலைவாய்ப்பு இருப்பின் அதற்கான முன் அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.chennaimetrorail.org) தெரிந்து கொள்ளலாம். இதைத் தவிர தினசரி தமிழ் நாளிதழ், ஆங்கில நாளிதழ்மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்புதாள்களிலும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. எனவே வேலை தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகார பூர்வ இணையத்தளத்தில் வெளிவரும் அறிவிப்புகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதைத் தவிர வேறு எந்தவொரு இணையதளத்திலும் வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்நிறுவனத்தின் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக பொய்யான இணையத்தளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொய்யான இணையத்தளத்தில் வெளியாகும் செய்திகள், விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாந்தால் இதற்கு எந்த விதத்திலும் இந்நிறுவனம் பொறுப்பேற்காது.

SCROLL FOR NEXT