தமிழகம்

திருத்தணி முருகன் கோயிலில் சிசிடிவி கேமராவை மூடிய 2 பேர் பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

திருத்தணி முருகன் கோயிலில் 2 அர்ச்சகர்கள் சிசிடிவி கேமராவை துணியால் மூடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்து கூறியதாவது:

திருத்தணி கோயிலில் சம்பந்தப்பட்ட 2 ஊழியர்கள் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். துறை சார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இன்னார் இனியார் என்று பாராமல் தவறு எங்கே ஏற்பட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு விசாரணையில் இருப்பதால் பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்டிருக்கின்றது.

விசாரணையில் குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்ட பிறகே தவறு எங்கே நடந்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறநிலையத் துறை அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT