தமிழகம்

‘தி இந்து - எஜுகேஷன் பிளஸ்’ சார்பில் உயர்கல்வி வழிகாட்டி கண்காட்சி: சென்னையில் ஏப்ரல் 9, 10-ம் தேதி நடக்கிறது

செய்திப்பிரிவு

‘தி இந்து எஜுகேஷன் பிளஸ்’ சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கண்காட்சி சென்னையில் ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி பெற வழிகாட்டும் வகையில் ‘தி இந்து எஜு கேஷன் பிளஸ்’ சார்பில் ஆண்டு தோறும் கல்விக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக் கான உயர்கல்வி வழிகாட்டி கண்காட்சி சென்னை நந்தம் பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் (சென்னை டிரேடு சென்டர்) ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் நடக்க உள்ளது.

விஐடி பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘தி இந்து - எஜுகேஷன் பிளஸ்’ நடத்தும் இந்த கல்விக் கண்காட்சிக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம், பாரத் பல்கலைக்கழகம், மார்க் டிசைன் மற்றும் ஆர்க்கிடெக்சர் கல்லூரி, சொர்ணபூமி ஆகியவை ஸ்பான்சர் செய்துள்ளன.

விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கண்காட்சியை தொடங்கிவைத்துப் பேசுகிறார். காக்னிசன்ட் நிறுவனத்தின் மனித ஆற்றல் மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் சதீஷ் ஜெயராமன் சிறப்புரையாற்றுகிறார்.

2 நாட்களும் காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சி நடைபெறும். இதில் கல்வியாளர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

கண்காட்சியின் முதல் நாளில், சட்டப் படிப்பு குறித்து ஹேமா ராமன், கணிதம் குறித்து ஆர்.ராமா னுஜம், கட்டிடக்கலை படிப்புகள் குறித்து சேவியர் பெனடிக்ட், கலை அறிவியல் படிப்புகள் குறித்து யஷஸ்வினி ராஜேஷ்வர், கலை சார்ந்த படிப்புகள் குறித்து மேகா குப்தா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினிசார் பாதுகாப்பு குறித்து ஜெ.பிரசன்னா, இத ழியல் குறித்து பிந்து பாஸ்கர் உரையாற்றுகின்றனர். மேலும், ‘இன்றைய வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நடைபெறும் குழு விவாதத்தில் ரிக்கி கேஜ், நிரஞ்சன் ஐயங்கார், மாலா மார்ட்டின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

2-ம் நாள் கண்காட்சியில் உயிரி தொழில்நுட்பவியல் தொழில்கள் குறித்து டி.பாலசுப்பிரமணியன், பொறியியல் படிப்பு குறித்து ரமேஷ் பிரபா, வங்கி மற்றும் நிதி சேவை குறித்து எஸ்.ஆச் சார்யா பேசுகின்றனர். எதிர்கால வேலைவாய்ப்புக்கான தயா ரிப்புகள் குறித்து விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், பேஷன் மற்றும் டிசைன் குறித்து கவுஸ்தவ் சென்குப்தா, புதிய தொழில்கள் தொடங்குவது குறித்து வைத்தியா சுப்பிரமணியம், மருத்துவம் குறித்து டாக்டர் ஜெ.எஸ்.ராஜ்குமார், வளர்ந்து வரும் புதிய துறையான மறுவாழ்வு பணிகள் குறித்து டாக்டர் சுந்தர் உரை நிகழ்த்துகின்றனர்.

இக்கண்காட்சியின்போது, உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பாக மாணவர்களும், பெற்றோரும் துறை நிபுணர்களுடன் கலந் துரையாடி சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். மேலும், ‘போதி’ ஆளுமை மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் இலவச உளவியல் தேர்விலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

2 நாட்கள் நடைபெறும் இந்த கல்விக் கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் எஸ்எம்எஸ் மூலமாக தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண் டும். இதற்கு EPCH என்று குறிப்பிட்டு இடம்விட்டு பெயர், வயது குறிப்பிட்டு 53030 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய www.thehindueducationfair.com என்ற இணையதளத்தை பார்க்கலாம். 9841076111, 9841079909 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT