தேமுதிகவின் வடசென்னை மாவட்ட பொறுப்பாளர்களாக நல்லதம்பி எம்.எல்.ஏ, இளைஞர் அணி துணை செயலாளர் மு.தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ப.மதிவாணன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேமுதிகவின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்த யுவராஜ் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிலையில், வடசென்னை தேமுதிக பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் புதிதாக நியமனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வடசென்னை மாவட்ட கழக பொறுப்பாளர்களாக கு.நல்லதம்பி எம்.எல்.ஏ., கழக இளைஞர் அணி து.செயலாளர், மு.தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர், ப.மதிவாணன், ஆகியோர் இன்று (30.03.2016) முதல் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
இவர்களுக்கு மாவட்டம், பகுதி, வட்டம், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் மாவட்டடத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாபெரும் வளர்ச்சியடைய, சிறப்புடன் செயல்பட அனைவரும் பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.