கல்லல் அருகே பெரிச்சிகோவில் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்து மணிமுத்தாற்றில் தண்ணீர் செல்கிறது. 
தமிழகம்

கல்லல் அருகே வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட 6 கிராமங்கள்: பள்ளி செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிய மாணவர்கள்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே கீழப்பட்டமங்கலம் ஊராட்சி தெற்கு நைனார்பட்டி, ஊடேந்தல்பட்டி, சாத்தனேந்தல் உள்ளிட்ட 6 கிராம மக்கள் அனைத்து தேவைகளுக்கும் பெருச்சிகோவில், கண்டரமாணிக்கம் சென்று வருகின்றனர். மாணவர்களும் பெருச்சிகோவில், கண்டரமாணிக்கம் பள்ளிகளில்தான் படிக்கின்றனர்.

சாத்தனேந்தல்-பெருச்சிகோவில் சாலையின் குறுக்கே மணிமுத்தாறு செல்கிறது. தண்ணீர் செல்ல குழாய் பதிக் காமல் தரைப்பாலம் அமைத்துள்ளனர். இதனால் வெள்ளக்காலங்களில் இப் பாலத்தை கடப்பது சிரமம். இதை யடுத்து பாலத்தை உயர்த்தி குழாய்கள் பதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் தொடர்மழையால் மணிமுத்தாற்றில் வெள்ளம் செல்கி றது. இதனால் பெரிச்சிகோவில் அருகே யுள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தெற்கு நைனார்பட்டி, ஊடேந்தல்பட்டி, சாத்தனேந்தல் உள்ளிட்ட 6 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பாலத்தில் இடுப் பளவு தண்ணீர் செல்வதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.

SCROLL FOR NEXT