மாணவியின் பெற்றோரிடம் நேற்று ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்குகிறார் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன். 
தமிழகம்

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் கோரிக்கை விடுத்த கல்லூரி மாணவிக்கு ரூ.5 லட்சம் வழங்கிய எம்எல்ஏ

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கடை யூரில் பிப்.14-ம் தேதி ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கும்பகோணம் காள சாந்தி கட்டளை தெருவில் வசிக்கும் காய்கறி மார்க்கெட்டில் பணிபுரியும் வி.ஜெகன்நாதன் தனது 2-வது மகள் உதயா பல் மருத்துவப் படிப்பைத் தொடர கல்விக் கட்டணம் செலுத்த உதவ வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார்.

அப்போது, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், அந்த மாணவியின் கல்விக் கட்டண முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து, மாணவியின் பெற்றோரை வரவழைத்து, மாணவியின் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணத்தில் மீதமிருந்த ரூ.3.5 லட்சத்தை வழங்கினார்.

அதைதொடர்ந்து, மாணவியின் 2-ம் ஆண்டுக்கான கல்விக் கட்ட ணமாக ரூ.5 லட்சத்துக்கான காசோ லையை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், தனது சொந்த நிதியிலிருந்து, மாணவியின் பெற்றோரிடம் நேற்று வழங்கினார். திமுக மாவட்ட பிரதிநிதி டி.என்.கரிகாலன், வழக் கறிஞர் உ.கரிகாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT