தமிழகம்

குழந்தைகள் தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை' நடத்திய ‘கோடத்தான்’ ஆன்லைன் குவிஸ் போட்டி முடிவுகள்

செய்திப்பிரிவு

குழந்தைகள் தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை' சார்பில் ‘கோடத்தான்’ ஆன்லைன் குவிஸ் போட்டி கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இப் போட்டியில் பல்வேறுபள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 9-ம்வகுப்பு வரை பயிலும் மாணவ -மாணவிகள் 1,400-க்கும் மேற்பட்டோர் பதிவுசெய்திருந்தனர். அவர்களுள் தேர்வு செய்யப்பட்ட 586 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

நவீனகால முக்கியதிறன்களில் ஒன்றான கோடிங், கம்ப்யூட்டர்புரோகிராமிங்கில் முக்கியப்பங்காற்றுகிறது. கம்ப்யூட்டர்களுடன் மனிதர்கள் தொடர்புகொள்வதற்கான மொழியாகவும் கோடிங்உள்ளது. கோடிங் மூலம் மாணவர்கள், கம்ப்யூட்டர்களை இயக்கும் புரோகிராம்களை உருவாக்க கற்றுக்கொள்ளலாம் என்பதோடு, அவர்கள் படைப்பாற்றல் வெளிப்படவும் வழிவகுக்கும் வகையில் ‘ஹெச்டி கோடத்தான் கோடிங்’ திறன் பயிற்சியை ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் நடத்தி வருகிறது.

இந்தப் பயிற்சியில் சேருவதற்கான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட இந்தகுவிஸ் போட்டியை, விண்வெளி அறிவியல் கற்றல் கிளப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநர், கற்றல் பயிற்சியாளர் வினோத் குமார் நடத்தினார். இப் போட்டியில் 10 மாணவர்கள் பரிசுகளைப் பெற தேர்வு செய்யப்பட்டனர்.

அதில், கோவை ஜிஆர்டி பப்ளிக்ஸ்கூல் (சிபிஎஸ்இ) 7-ம் வகுப்புமாணவி எம்.நித்திலா முதலிடத்தையும், சென்னை வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (மெயின் பள்ளி) 9-ம் வகுப்பு மாணவன் எஸ்.காளி விஷ்வா இரண்டாம் இடத்தையும், சென்னை குரோம்பேட்டை விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி 9-ம் வகுப்பு மாணவன்ஆர்.வத்சன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

மாணவர்கள் கிளப்

‘இந்து தமிழ் திசை’ சார்பில் மாணவர் கிளப் தொடங்குவது குறித்தஅறிவிப்பு, இந்த குவிஸ் போட்டியின்போது வெளியிடப்பட்டது. இந்த கிளப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாணவர் கிளப் குறித்த முறையான தகவல்கள் ‘இந்து தமிழ் திசை’யில் விரைவில் வெளியாகும். பள்ளிகள் தங்கள் மாணவர்களை கிளப்பில் சேர்த்துக் கொள்ளலாம்,

மேலும், பல நிகழ்வுகள், போட்டிகளில் பங்கேற்க இது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த பயனளிப்பதாக அமையும்.

SCROLL FOR NEXT