தமிழகம்

நவ.19.ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

செய்திப்பிரிவு

வரும் நவம்பர் 19 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் வெள்ளச் சேதம் குறித்தும் நிவாரண நிதி குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துள்ளது. தலைநகர் சென்னை தொடங்கி பல்வேறு மாவட்டங்களிலும் இயல்பைவிட அதிகமாக மழைப் பதிவாகியுள்ளது. இன்னும் பருவமழை காலம் முடிவடையாத நிலையில் பல மாவட்டங்களிலும் ஆண்டு சராசரி மழை பதிவாகிவிட்டது.

முன்னதாக, வடகிழக்குப் பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (செவ்வாய்க் கிழமை) ஆய்வுக் குழுவினர் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இதுவரை தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள சேதம் குறித்தும், நிவாரண நிதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கும் வகையில் வரும் நவம்பர் 19 ஆம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT