மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.184 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அறிவித்து 5 ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் கட்டப்படாததால், நேற்று காலை முகூர்த்த தினம், பள்ளிகள் திறப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தால் 3 மணி நேரமாக 2 கி.மீ. தொலைவுக்கு நகர முடி யாமல் வாகனங்கள் நின்றதால் பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
மதுரையின் மையமாக கோரிப்பாளையம் சந்திப்பு உள்ளது. கடந்த கால் நூற்றாண் டாக இப்பகுதியில் நீடிக்கும் நெரிசலுக்குத் தீர்வாக கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.184 கோடியில் உயர்மட்ட பாலம் அமைப்ப தாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்கான நில ஆர்ஜிதப் பணியில் சிக்கல் ஏற்பட்டதால் அதிமுக அரசு இந்த திட்டத்தை கைவிட்டு, அதற்கு பின் அறிவித்த மற்ற சாலைகளில் பாலங்களை கட்டியது. அதனால் கோரிப்பாளையம் உயர் மட்ட பாலம் திட்டம் அறிவிப்போடு நிற்கிறது.
அமைச்சர்கள் தீர்வு காண்பார்களா?
தற்போதைய திமுக ஆட்சியிலாவது கோரிப்பாளையம் நெரிசலுக்கு விடிவு காலம் பிறக்குமா? என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களும் இதற்கு முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை.
உள்ளூர் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இந்த வழியாகத்தான் சென்று வருகி ன்றனர். அவர்கள் வரும்போது போக்குவரத்து போலீஸார் நெரிசலை ஒழுங்குபடுத்தி சமாளித்து விடுவதால் அவர்களுக்கு இப்பகுதி பிரச்சினையின் தீவிரம் சென்ற டையவில்லையோ என்று தோன் றுகிறது.
அந்தளவுக்கு நகரின் இதயமான இப்பகுதியை கடந்து செல்வதற்குள் மக்கள் மனம் நொந்து செல்கின்றனர். நேற்று முகூர்த்த நாள், பள்ளிகள் திறப்பு, அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் போன்றவற்றால் கோரிப் பாளையம் சந்திப்பு போக்குவரத்து நெரி சலால் ஸ்தம்பித்தது.
அரசு மருத்துவமனைகளுக்கு செல்லக் கூடிய ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற பெற்றோர், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் கோரிப்பாளையம் சந்திப்பை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். கோரிப்பாளையத்தில் ஆரம் பித்து தல்லாகுளம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
போக்குவரத்து போலீஸார் முடிந் தளவு போக்குவரத்து நெரிசலை ஒழுங் குபடுத்தினர். ஆனால், இயல்பான நெரிசலுடன் முகூர்த்த நாள் கூட்டம், பள்ளி களுக்கு செல்லும் பெற்றோர், கல்லூரி மாணவர் போராட்டமும் சேர்ந்ததால் கோரிப்பாளையம் சந்திப்பு ஸ்தம்பித்தது.
கடந்த கால் நூற்றாண்டாக நீடிக்கும் கோரிப்பாளையம் சந்திப்பு போக்குவரத்து பிரச்சினைக்கு உள்ளூர் அமைச்சர்களும், மாவட்ட நிர்வாகமும் நிரந்தர தீர்வு கண்டு விரைவாக உயர்மட்ட மேம்பாலம் கட்டு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.