தமிழகம்

பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் இன்று ஆலோசனை

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

பாமக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராயர் நகர் தெற்கு போக் சாலையில் உள்ள முருகன் திருமண அரங்கில் இன்று (17-ம் தேதி) நடைபெறுகிறது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்குகிறார். கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகிக்கின்றனர். காலை 10 மணிக்கு மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. மாலை 4 மணிக்கு ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாநகரப் பகுதி, மண்டல செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள், தேர்தல் அறிக்கை வெளியிடுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT