மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். 
தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை உற்சவ கொடியேற்றம்

செய்திப்பிரிவு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் திருக்கார்த்திகை உற்சவம் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை உற்சவத்தையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத் தில் நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர்.

இவ்விழா நவ.23-ம்தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழா நடைபெறும் 10 நாட் களும் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆடி வீதியில் புறப்பாடாகி அருள்பாலிப்பர். நவ.19-ம் தேதி திருக்கார்த்திகை அன்று மாலை கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும். அன்று இரவு 7 மணி அளவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி சுவாமி சன்னதி, சித்திரை வீதியில் கொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் எழுந்தருள்வர்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை செய்து வருகிறார்.

SCROLL FOR NEXT