திருப்பத்தூர் அருகே சவுமிய நாராயணபுரத்தில் கரோனா தடுப்பூசி முகாமில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கிடந்த பல்லி. (வலது) சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த ஹோட்டலுக்கு ‘சீல்’ வைத்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள். 
தமிழகம்

திருப்பத்தூர் தடுப்பூசி முகாமில் ஊழியர்களுக்கு வழங்கிய இட்லி, சாம்பாரில் பல்லி; 3 பேருக்கு வாந்தி, மயக்கம்: ஹோட்டலுக்கு ‘சீல்’

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கரோனா தடுப்பூசி முகாமில் ஊழியர்களுக்கு வழங்கிய இட்லி, சாம்பாரில் பல்லி இருந்ததால் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உணவு வழங்கிய ஹோட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சி சவுமிய நாராயணபுரம் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் செவிலியர்கள் உட்பட 5 பேர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு காலை உணவாக திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் இருந்து இட்லி, சாம்பார் வழங்கப்பட்டது.

ஊழியர்கள் சாப்பிடும்போது சாம்பாரில் இறந்த நிலையில் பெரிய பல்லி கிடந்தது. இதனால் அந்த உணவை சாப்பிட்ட கூட்டு றவுத் துறை ஊழியர் குழந்தை, செவிலியர் தேன்மொழி, கிராம நிர் வாக அலுவலர் சீனிவாசன் ஆகி யோர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர்.

இவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஊழியர் குழந்தை தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார்.

இதையடுத்து உணவு பாது காப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் ஆய்வு செய்தனர். அப்போது கடையின் உரிமம் காலாவதியானது தெரிய வந்தது.

மேலும் தரமின்றி தயாரிக் கப்பட்ட காலை, மதிய உணவை பறிமுதல் செய்து அழித்தனர்.

தொடர்ந்து ஹோட்டல் உரிமை யாளருக்கு அபராதம் விதித்து ஹோட்டலுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

SCROLL FOR NEXT