சிங்கப்பூர் தமிழறிஞர் மு.தங்கராச னின் படைப்பாக்கங்கள் குறித்து பன்னாட்டுக் கருத்தரங்கம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அதன் இயக்குநர் தா.லலிதா தலைமையில் நடைபெற்றது.
குறிஞ்சி தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் ந.ரத்தினக்குமார் வரவேற்றார். இவ்விழாவில் கருத்தரங்கின் ஆய்வுத் தொகுதியை குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் வெளியிட்டுப் பேசியதாவது:
உலகில் எழுத்துகள், சொற் களுக்கு இலக்கணம் வகுக்கும் மொழிகளுக்கு மத்தியில் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கும் ஒரே மொழி தமிழ். தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி, பாடமொழியாக இருக்கக் காரணம் ஆங்கிலேய அரசின் வைஸ்ராய் கர்சன் பிரபு.தொன்மை, செழுமை, இலக்கண வளம் உள்ளிட்ட 14 பண்புகள் உள்ள மொழியே செம்மொழி. அத்தகைய பண்புகளை உடை யது தமிழ் மொழி. சுமார் 1,400 ஆண்டுக்கு முன்பே மதுரை மாநக ரம் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிராகச் சொற்போரிட்டு தமிழ்மொழியைக் காத்தது. சமயத்தையே காத்த மொழி தமிழ் மட்டுமே.
தமிழர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் வாழ்ந்த மண்ணுக்கு பெருமை சேர்ப்பவர்கள். அவ்வழி யில் மு.தங்கராசன் சிங்கப் பூரில் வசித்தாலும் தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றியுள் ளார், என்றார்.
ஆய்வுத் தொகுப்பை பத்ம விருதுபெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா பெற்றுக் கொண்டார். குறிஞ்சி தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் சே.பால கிருஷ்ணன் நன்றி கூறினார்.
பின்னர் நடந்த நிறைவு விழாவுக்கு முன்னாள் பேராசிரியர் மு.மணிவேல் தலைமை வகித்தார். குறிஞ்சி தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையப் பதிப்பாசிரியர் பா.சிங்காரவேலன் வரவேற்றார். சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சாகித்ய அகாடமி விருதாளர், எழுத்தாளர் சோ.தர்மன் சிறப்புரை ஆற்றினார்.
குறிஞ்சி தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் ஆ.பூமிச் செல்வம் நன்றி கூறினார்.