பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; குமரியின் சில இடங்களில் அதி கனமழை: வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மேலும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் பெய்துள்ள நிலையில் மேலும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் 4 நாட்களாகப் பெய்துவரும் மழைநீரால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. இந்நிலையில் அங்கு இன்று மேலும் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழையும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில இடங்களில் மட்டும் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, திண்டுக்கல். தேனி, திருப்பூர் மாவட்டங்களில் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 50 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும்.

நேற்று தெற்கு அந்தமான் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. தற்போது மத்திய அந்தமானில் உள்ளது. அது தென்மேற்கு பகுதியில் நகர்ந்து 15 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஏற்கனவே பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சற்றே தாமதமாக 17ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT