தமிழகம்

மலிவு விலை உணவகங்களை பள்ளிகளில் திறக்க வேண்டும்: மாணவிகளுக்கான அமைப்பு கோரிக்கை

செய்திப்பிரிவு

பெண் குழந்தைகள் கல்வி மேம்பாட்டுக்காக செயல்படும் நாந்தி பவுன்டேசன் என்ற அமைப்பு அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி நேரம் முடிந் ததும் பாடங்களில் தேவையான முன்னேற்றத்தை கொண்டு வருவதற்காக மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துகிறது. மேலும் ஆண்டுதோறும் கற்றல் உபகரணங்களையும் வழங்கி வருகிறது.

இந்த அமைப்பு சார்பில் முகப்பேரில் நேற்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தும் பெண் பயிற்றுநர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதைப்போல காலை உணவும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சமீபத்திய ஆய்வின்படி 80 சதவீதம் மாணவ மாணவிகள் காலை உணவை உண்ணாமல் பள்ளிக்கு வருவதாக தெரிகிறது.

எனவே பொது இடங்களில் உள்ள மலிவு விலை உணவகங்களைப் போல பள்ளியிலும் காலை உணவு கூடங்கள் திறக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக் கியத்துடன் தொடர்புடைய இந்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண் டியன், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பாளர் சுசீலா தலைமை தாங்கினார். ஷெரில், பவானி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT