‘என் மீது ஆதாரமற்ற புகார் தருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நான் அரசு பதவிகளில் இருந்தபோது சட்டவி திகளுக்கு முரணாக செயல் பட்டதில்லை. யாரும் என் மீது குற்றம் சாட்ட முடியாதபடி அரசியலில் பயணித்து வருகிறேன். எனது மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட வர்கள் எந்தவித ஆதாரமும் இல்லமால் தவறான தகவல்களை பரப்பி வரு கின்றனர்.
இது போன்று செயல்படு பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன். குறிப்பாக விஜயநல்லதம்பி என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்கு களில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற மோசடி நபர்களை பொது மக்கள் நம்ப வேண்டாம். விஜயநல்ல தம்பிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.