மதுரையில் நேற்று முன்தினம் இரவு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்ற பிரபல ரவுடி குருவி விஜய் என்ப வரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
மதுரை அண்ணா நகர் செண் பகத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் குருவி விஜய் (30). பிரபல ரவுடியான இவர் மீது வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை போலீஸார் தேடி வந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். வெளி மாவட்டங்களிலும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுரைக்கு வந்த குருவி விஜய், தனது கூட்டாளியான வண்டியூர் கார்த்தி என்ற மவுலியுடன் சேர்ந்து செண்பகத் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் மது அருந்தினார். அப்போது அண்ணா நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், அவரது உறவினருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்பெண்ணை வழிமறித்த குருவி விஜய்யும், கார்த்தியும் அப்பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்றனர். அப்பெண்ணின் அலறல் கேட்டு அவரது உறவினர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றார். அவரையும் ரவுடிகள் தாக்கினர். உடனடியாக அண்ணா நகர் போலீஸாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். அப்போது ரவுடிகள் இருவரும் அப்பெண்ணை வேனுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்மு றையில் ஈடுபட முயன்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா நகர் காவல் ஆய்வாளர் செந்தில்குமரன், துணை காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் ரவுடிகள் இருந்த வேனை சுற்றி வளைத்தனர். அப்போது குருவி விஜய் அப் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடு வதாக மிரட்டி உள்ளார். மேலும் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். கல் வீச்சில் காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் காயமடைந்தார்.
இதையடுத்து ரவுடிகளை நோக்கி செந்தில்குமரன் துப்பாக் கியால் ஒரு ரவுண்டு சுட்டார். இதில் ரவுடி குருவி விஜய் காலில் குண்டு பாய்ந்தது. அவரை போலீஸார் பிடித்தனர். மற்றொரு ரவுடியான கார்த்தி தப்பியோடும்போது கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
ரவுடியின் சகோதரி மனு
இந்நிலையில் ரவுடி குருவி விஜய்யின் சகோதரி லாவண்யா என்பவர் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், எனது அண்ணன் குருவி விஜய் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை அழைத்து சென்ற அண்ணா நகர் போலீஸார் வேனுக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டனர். போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.