கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலில், “வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை நீடிக்கும்.
சேலம், டெல்டா, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.