தமிழகம்

தேவகோட்டை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தங்கை: சாமர்த்தியமாக காப்பாற்றிய அக்காவுக்கு பாராட் டு

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டை அருகே பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 9 வயது தங்கையை சாமர்த்தியமாக காப்பாற்றிய அக்காவுக்கு பாராட் டுகள் குவிகின்றன.

தேவகோட்டை அருகே வெட்டு க்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரபு-சுமதி தம்பதிக்கு தேவிஸ்ரீ (14), ஹர்ஷினி (9), ரித்திகா (5) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த நவ.10-ம் தேதி பள்ளிக்கு விடுமுறை என்பதால் தேவிஸ்ரீ, ஹர்ஷினி ஆகியோர் அப்பகுதியில் உள்ள கண்மாய்க் கரையில் ஆடுகளை மேய்த்தனர்.

அப்பகுதியில் சில மாதங் களுக்கு முன்பு என்.மணக்குடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீருக்காக ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. அதில் தண்ணீர் வராததால், பிளாஸ்டிக் குழாய்களை எடுத்துவிட்டு மண் ணால் மூடி வைத்திருந்தனர். தொடர் மழையால் மண் கரைந்து ஆழ்துளைக் கிணறு புதை குழி போன்று மாறியிருந்தது.

அந்தக் குழியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த ஹர்ஷினி தவறி விழுந்தார். மேலும் அவர் ‘அக்கா காப்பாற்று,’ என கூச்சலிட்டுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு தேவிஸ்ரீ வருவதற்குள் அவரது உடல் குழிக்குள் சென்று தலை மட்டுமே தெரிந்தது. தேவிஸ்ரீ சாமர்த்தியமாக செயல்பட்டு தங்கையின் தலை முடியையும், கையையும் பிடித்து கொண்டு கூச்சலிட்டுள்ளார். இதைக் கேட்டு அருகில் இருந்தோர் ஓடிச் சென்று ஹர்ஷினியை காப்பாற்றினர். சாமர்த்தியமாக செயல்பட்டு தங்கையை காப்பாற்றிய தேவிஸ்ரீக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதையறிந்த வருவா ய்த்துறை அதிகாரிகள் ஆழ்துளைக் கிணற்றை முழுவதுமாக மண், மரங்களை போட்டு மூடினர்.

SCROLL FOR NEXT