புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “தற்போதைய நிலவரப்படி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதுமேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலாக மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வலுப்பெறக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. மிக கனமழை நான்கு இடங்களிலும், கனமழை 20க்கும் மேற்பட்ட பகுதிகளிலும் பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுரளகோடு பகுதியில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரியில் கனமழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும். புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.