தமிழகம்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 272 பேர் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 272 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சேர்க்கையில் போதிய இடம் கிடைக்காத நிலை இருந்தது. இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்வி சேர்க்கையில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது.

இதனால், கடந்த ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்வியில் சேர்ந்தனர். இந்நிலையில், நடப்பாண்டு நீட் தேர்வில், சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 1,080 பேர் பங்கேற்றனர். இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 227 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT