தமிழகம்

சிறுவனை தாக்கிய 5 போலீஸாரிடம் விசாரணை

செய்திப்பிரிவு

சிறுவனை தாக்கிய 5 போலீஸா ரிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தலைமைக் காவலர் சரவணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை துரைப்பாக்கம் கண் ணகி நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி சுமதி. இவர்களின் 3-வது மகன் முகேஷ் (17). சுமை தூக் கும் தொழிலாளி. கடந்த 11-ம் தேதி இரவு 11 மணியளவில் முகேஷ் வீட் டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த போலீஸார், வின்சென்ட் வீட்டுக்குள் நுழைந்து, முகேஷை அடித்து உதைத்து காருக்குள் இழுத்து போட்டு சென்றுள்ளனர். பின்னர் அவரது கண்களை கட்டி கம்புகளால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் முகேஷின் தலை, முகம், விரல்கள் என உடம்பு முழுவதும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பின்னர் போலீஸார், ‘நாம் தேடி வந்தது இவன் அல்ல' என்று பேசிக் கொண்டு, முகேஷை துரைப்பாக் கம் அருகே சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். ரத்த காயங் களுடன் சாலையில் கிடந்தவரை அருகே இருந்தவர்கள் மீட்டு தண் ணீர் கொடுத்து காப்பாற்றி, அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடல் முழுவதும் காயங்களுடன், விரல்கள் கடுமையாக பாதிக்கப் பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரு குற்றவாளியை பிடிக்க சென்று ஆள்மாறாட்டத்தில் முகேஷை பிடித்து போலீஸார் தாக்கியிருப்பது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று போலீஸார் முகேஷின் பெற் றோரை மிரட்டியுள்ளனர். ஆனால் முகேஷை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது தாயார் சுமதி, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக கூடுதல் ஆணையர் சங்கர் தலைமையில் ஒரு விசாரணை குழுவையும் அமைத்துள்ளார். இவர்கள் நடத்திய விசாரணையில் குற்றப்பிரிவை சேர்ந்த ஒரு காவல் ஆய்வாளர், 1 உதவி ஆய்வாளர் கள், 3 காவலர்கள் சேர்ந்து முகேஷை தாக்கியது தெரிந்தது. இந்த 5 போலீஸாரிடமும் கடந்த 3 நாட் களாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மற்ற போலீஸார் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT