பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை

செய்திப்பிரிவு

தொடர் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும் மழையால் தத்தளித்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மண்டலமாக வலுப்பெற்று இன்று கரையைக் கடக்கிறது. இதனால் இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர் கனமழை காரணமாகப் பல இடங்களில் தேங்கியுள்ள மழை நீர் முழுமையாக வடியாததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நாளையும் விடுமுறை அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT