தமிழகம்

விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு அங்கன்வாடி பணிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

செய்திப்பிரிவு

அங்கன்வாடி பணியாளர் தேர்வில்,விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள் ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் முதன்மை அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடிஉதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களில் முன்னுரிமை அடிப்படையில் 25 சதவீதஇடங்களை விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்ப ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அரசாணை யில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT