தமிழகம்

மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி: நெல்லை நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.கரு ணாகரனின் வாகனம் நேற்று நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படைத்தளம் உள்ளது.

இதற்கான கட்டுப்பாட்டு அறை மற்றும் தகவல் தொடர்பு கோபுரம், அலுவலகங்கள் பாளை யங்கோட்டை பெருமாள் புரத்தில் அமைந்துள்ளன. 1982-ம் ஆண்டில் இதற்காக பெருமாள்பு ரம் பிரதான சாலையை யொட்டி 38 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இந்த நிலத்தின் உரிமையாளர் களான சுப்புராயலு, அவரது உறவினர்கள் பத்மநாபன், கேசவன் ஆகியோருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் இத்தொகை மிகவும் குறைவாக உள்ளதாகக் கூறி, திருநெல்வேலி நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து ஒரு சென்ட் நிலத்துக்கு ரூ.200 வீதம் 38 ஏக்கர் நிலத்துக்கு ரூ.40 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தர விட்டது. இதற்கிடையே வழக்கு நடைபெற்றபோதே சுப்புராயலு, பத்மநாபன் ஆகியோர் மரண மடைந்தனர். இதனால், இந்த வழக்கை அவர்களது வாரிசுகள் நடத்தி வந்தனர்.

இழப்பீடு வழங்கவில்லை

கடந்த ஆண்டு இந்த வழக்கை விசாரித்து வாரிசுகளுக்கு ரூ.40 லட்சத்தை வட்டியுடன் வழங்க மாவட்ட நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. அதன்பேரில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ரூ.22 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால் பாக்கி தொகை ரூ.18 லட்சம் வழங்கப்படவில்லை.

இதனால் பத்மநாபனின் வாரிசுகள் கடந்த மாதம் திருநெல்வேலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த்குமார், பாக்கி தொகைக் காக திருநெல்வேலி ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரின் கார் களை ஜப்தி செய்யலாம் என்று கடந்த 2 வாரத்துக்கு முன் உத்தரவிட்டிருந்தார்.

வாகனம் ஜப்தி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோ ரின் வாகனங்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் நேற்று திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்கு வந்தனர். ஆட்சியர் அலுவலக பிரதான கட்டிடம் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்சியர் மு.கருணாகரனின் வாகனத்தை (எண் டிஎன் 72 ஏஜி 5000) ஜப்தி செய்வதற்கான நோட்டீஸை அதில் ஒட்டினர்.

இதுகுறித்து தெரியவந்ததும் வழக்கு தொடர்ந்தவர்களுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று மாலை வரை உடன்பாடு ஏற்படவில்லை. இதை யடுத்து ஆட்சியரின் காரை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். ஆட்சியர் அலுவலகத் தில் கோட்டாட்சியரின் கார் நிறுத் தப்படவில்லை என்பதால், அதை ஜப்தி செய்ய முடியவில்லை.

SCROLL FOR NEXT