தமிழகம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயாவுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயாவுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி முதல் பதவி வகித்து வருபவர் சஞ்ஜிப் பானர்ஜி. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த இவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டி ருந்தார்.

இந்நிலையில் சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதேபோல, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

SCROLL FOR NEXT