பராமரிப்பு பணி காரணமாக 11-ம் தேதி அன்று பொன்னேரியில் ஒரு நாள் மின் தடை விதித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
"சென்னையில் நவம்பர் 11ம் தேதி அன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பொன்னேரி துரைநல்லூர் பகுதிகளான ; கவரபோட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேதூர், புலிகட், திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்"
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.