பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

நீடிக்கும் மழை; வக்பு வாரிய பணியாளர்கள் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

செய்திப்பிரிவு

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நடைபெறவுள்ள தமிழ்நாடு வக்பு வாரிய பணியாளர்கள் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

"தமிழ்நாடு வக்பு வாரிய பணியாளர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் எழுத்து தேர்வு வரும் 13 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வு ஆன்லைன் தேர்வு என்றாலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று அங்கு தேர்வுகளை எழுத வேண்டும் என தமிழ்நாடு வக்பு வாரியம் அறிவித்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையும் அதனை தொடர்ந்து வெள்ளப்பெருக்கும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 10ஆம் தேதி முதல் ஒரு வாரம் வரை கனமழை நீடிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக அரசு நவம்பர் 13ம் தேதி அன்று நடைபெறவுள்ள தேர்வை ஒத்திவைத்து வேறொரு நாளில் தேர்வை நடத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

SCROLL FOR NEXT