தமிழகம்

கோடம்பாக்கத்தில் ஜி.கே.வாசன் ஆய்வு ; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிவாரண பொருட்களை வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கோடம்பாக்கத்தில் உள்ள மழை பாதிப்பை தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்த குறைகளை கேட்டுக்கொண்ட அவர், தொலைபேசி வாயிலாக கோடம்பாக்கம் மண்டல பொறுப்பாளரிடம் உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முதியோர் இல்லத்தில் இருந்த ஆதரவற்றோர்களுக்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

SCROLL FOR NEXT