உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஆனந்தகுமார் உட்பட 13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநர் வி.ராஜாராமன், தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராகவும், வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிக ஆணையர் எம்.வள்ளலார், ஜவுளித் துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நில நிர்வாக கூடுதல் ஆணையர் வி.சாந்தா, நில சீர்திருத்தத் துறை கூடுதல் ஆணையராகவும், நில சீர்திருத்த இயக்குநர் எஸ்.ஜெயந்தி,நில நிர்வாக கூடுதல் ஆணையராகவும், சுகாதாரத் துறை இணைச் செயலர் எஸ்.நடராஜன், வேளாண் சந்தைப்படுத்தல் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் ஜி.பிரகாஷ், கலை மற்றும் கலாச்சார ஆணையராகவும், சென்னை மாநகராட்சி மத்தியப் பகுதி துணைஆணையர் சரண்யா அரி, பள்ளிக்கல்வித் துறை துணைச் செயலராகவும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் டி.எஸ்.ராஜசேகர், மாநில திட்டக் குழுவின் உறுப்பினர்-செயலராகவும், அப்பதவியில் இருந்த ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் ஆர்.ஆனந்தகுமார், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்-செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தனி அடையாள ஆணைய உதவி இயக்குநர் ஜெனரலாக இருந்த எஸ்.பிரபாகர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராகவும், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.ஷேக் அப்துல் ரஹமான், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராகவும், சேலம் சேகோசர்வ் மேலாண் இயக்குநர் ஜெ.இ.பத்மஜா, தமிழ்நாடு ஊரகபுத்தாக்க திட்ட தலைமை செயல்அதிகாரியாகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.