தமிழகம்

தங்கத்தை வயர்களாக மாற்றி துபாயில் இருந்து கடத்தல்: சென்னையில் 2.06 கிலோ தங்கம் சிக்கியது

செய்திப்பிரிவு

துபாயில் இருந்து தங்கத்தை வயர்களாக மாற்றி கடத்தி வரப்பட்டது சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையில் 2.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்தது.

துபாயில் இருந்து எதிகாட் ஏர்வேஸ் விமானம் மூலம் நேற்று சென்னை வந்த விமான பயணியிடம், உளவுத் தகவல் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவரது உடமைகளை பரிசோதித்ததில், தங்க வயர்கள், பைகளின் உலோக சட்டத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 2.06 கிலோ தங்கம், சுங்கச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றின் மதிப்பு ரூ.90.17 லட்சம். இந்த கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடப்பதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT