தமிழகம்

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: முழு விவரம்

செய்திப்பிரிவு

கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றுஅதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.

இந்நிலையில் நேற்றிரவு முதலே பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டங்களின் மழை நிலவரத்தைப் பொருத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுறை, சேலம், கரூர், திருப்பத்தூர், சிவகங்கை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT