தமிழகம்

ஆளுநரின் பாதுகாப்பு வாகனத்தால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது: டிஜிபிக்கு ஆளுநர் ரவி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

ஆளுநரின் பாதுகாப்பு வாகனத்தால் பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படக்கூடாது என்று டிஜிபிக்கு தமிழக ஆளுநர் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஜிபி சைலேந்திர பாபு கடந்த 6-ம் தேதி சந்தித்தார். அப்போது, ஆளுநரின் பாதுகாப்பு வாகனத்தால் (கான்வாய்) பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு டிஜிபியை ஆளுநர் ரவி அறிவுறுத்தினார்.

மேலும், ஆளுநர் செல்லும் பாதையில் மக்களுக்கு இடையூறுஏற்படும் வகையில் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது. இதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறும்டிஜிபியை அவர் கேட்டுக்கொண்டார். இத்தகவலை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT