தமிழகம்

நிலக்கோட்டையில் பைக் மீது கார் மோதியதில் இளைஞர் உட்பட 2 பேர் மரணம்: மின்கம்பி மீது தூக்கி வீசப்பட்ட இளைஞர்

செய்திப்பிரிவு

நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மின்கம்பி மீது தூக்கி வீசப்பட்ட இளைஞர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

மதுரை பெருங்குடியைச் சேர்ந்தவர்கள் காமராஜ்(20), அஜித்கண்ணன்(20). இவர்கள் தங்களது நண்பர்கள் 8 பேருடன் ஐந்து மோட்டார் சைக்கிள்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று மாலை மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி சிவன் கோயில் பகுதியில் சென்றபோது, காமராஜ், அஜித்கண்ணன் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில் படுகாயமடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்புறம் அமர்ந்திருந்த அஜித்கண்ணன் தூக்கி வீசப்பட்டார். இவர் சாலையில் உயரமாக சென்ற மின் கம்பி மீது விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடல் மின்கம்பியில் தொங்கியவாறு இருந்தது.

இந்த விபத்து குறித்து நிலக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT