தமிழகம்

நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருந்தால் நிச்சயம் ஏமாற மாட்டார்கள்: உணவுப்பொருள் வழங்கல்துறை ஆணையர் பேச்சு

செய்திப்பிரிவு

நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருந்தால் நிச்சயம் ஏமாற மாட்டார் கள்.அவர்களை ஏமாற்றவும் முடியாது என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எஸ்.கோபாலகிருஷ்ணன் பேசினார்.

இந்திய நுகர்வோர் அமைப்பின் சார்பாக உலக நுகர்வோர் தினத்தையொட்டி மாணவர் நுகர்வோர் மன்ற உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில்,சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்ட உணவுப் பொருள் வழங்கல்துறை ஆணையர் எஸ்.கோபாலகிருஷ்ணன் பேசிய தாவது:

இன்றைக்கு எழுதப்படிக்க தெரியாததாலும்,அறியாமையின் காரணமாகவும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நாம் வாங்கும் பொருட்கள் எத்தகையது என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள தற்போதைய சூழலில் ஆன்-லைன் வர்த்தகத்தில் நாம் வாங்கும் பொருளின் விற்பனையாளர் எங்கிருக்கிறார் என்பதே நமக்குத் தெரிவதில்லை.நமக்கு தெரிந்த நுகர்வோர் விழிப்புணர்வு விஷயங்களை நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும். நாம் ஏமாந்த பிறகுதான் நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் செல்கின்றோம். ஏமாறுவதற்கு முன்பே நாம் விழிப்படைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம், இந்திய நுகர்வோர் அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன், திட்ட இயக்குநர் கல்யாணி ராஜாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT