சென்னையிலிருந்து இன்று மாலை புறப்பட இருந்த உள்ள ஜெய்ப்பூர், மங்களூரு ரயில்கள் இணைப்பு ரயில் தாமதமாக இயக்கப்பட்டதால் நேரத்தை மாற்றியமைத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதகுறித்து இன்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
இன்று பிற்பகல் 4.20 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் எண்: 02685 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மங்களூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இணைப்பு ரயில் தாமதமாக இயக்கப்பட்டதால் (3.10 மணிநேரம் தாமதமாக) இன்று மாலை 7.30 மணிக்கு (ரயில்வே நேரப்படி 19.30க்கு) புறப்பட உள்ளது.
இன்று மாலை 5.40 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ரயில் எண்: 02967 இணைப்பு ரயில் தாமதமாக இயக்கப்பட்டதால் (2 மணிநேரம் 50 நிமிடங்கள் தாமதமாக) 07.11.2021 அன்று இரவு 8.30 மணிக்கு (ரயில்வே நேரப்படி 20.30க்கு) புறப்படும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.
இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.