நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் இன்று தனது 67 - வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதனை தொடர்ந்து பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் 'கலைஞானி' கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்" என்று தெரிவுத்துள்ளார்.
பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.