சென்னையில் 2015ம் ஆண்டுக்குப்பின் அதிகபட்சமாக நேற்று மழைப் பொழிவு பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்து வந்தது. ஆனால், நேற்று இரவு பெய்யத் தொடங்கியபின் விடிய, விடிய பெய்தது. இன்று காலை 5 மணிவரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் விடாது மழை பெய்தது. கடந்த 5 ஆண்டுகளுக்குப்பின் இதுபோன்ற மழையைப் பார்த்திராத மக்கள் மகிழ்ச்சியும் அதேசமயம் அச்சமும் அடைந்தனர்
சென்னையின் முக்கிய பகுதிகளான வடபழனி, நுங்கம்பாக்கம், தி நகர், போரூர், வளசரவாக்கம், அண்ணாசாலை, கோடம்பாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை மாம்பலம், மைலாப்பூர் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் மிககனமழை பெய்ததால் சாலைகள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தென் மேற்கு வங்கக்கடலுக்கு அருகே, வடக்கு தமிழகக் கடற்கரை ஓரத்தில் யுஏசி எனப்படும் காற்றுமேலடுக்கு சுழற்சி நெருக்கமாக இருந்து வருகிறது. ஒன்று சென்னை நெல்லூர் அருகேயும், மற்றொன்று மைசூர் முதல் ராமநாதபுரம்வரையிலும் இருக்கிறது. இதில் 2-வதாக உள்ள யுஏசி, அரேபிக்கடலிருந்து தமிழகக் கடற்கரை வரை படர்ந்திருக்கிறது. ஆதலால், அடுத்த சில நாட்களுக்க தமிழகத்திலநல்ல மழை இருக்கும்.
சென்னையைப் பொறுத்தவரை, சென்னை முதல் நெல்லூர் வரை மேகக்கூட்டங்கள் காணப்படுவதால் நாளைவரை மழை இருக்கும். அடுத்த இரு நாட்களுக்கு நல்ல மழை ெபய்யக்கூடும் என எதிர்பார்க்கலாம். சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளி்ல மிக கனமழையும் எதிர்பார்க்கலாம். குறிப்பாக திருவள்ளூர் மற்றும் வடசென்னை பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புண்டு.
சென்னையைப் பொறுத்தவரை இன்று காலை 5 மணிவரை விடாது மழை பெய்துவருகிறது. வில்லிவாக்கத்தில் 162மி.மீ, நுங்கம்பாக்கத்தில் 145 மி.மீ, புழல் 111மிமீ மழை பதிவானது.
கடந்த 2015ம் ஆண்டுக்குப்பின் சென்னையில் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய சென்னைப்பகுதியை நோக்கி மேகக்கூட்டங்கள் நகர்ந்து வருவதால் மழை தொடரும்.
இன்று காலை 7.30மணி நிலரப்படி அதிகபட்சமாக நுங்கம்பாகத்தில் 207மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 2ம் ேததி 294 மி.மீ மழைபதிவானது அதன்பின் நேற்று அதிகபட்சமாக பதிவானது
இதற்கு முன் கடந்த 2020ம் ஆண்டில் நவம்பர் 25ம்தேதி 162 மி.மீ, 2017ம் ஆண்டில் நவம்பர் 3ம் தேதி 183 மி.மீ மழைபதிவானது.
மைலாப்பூரில் 226 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அம்பத்தூரில் 205 மி.மீ மழை பதிவானது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நுங்கம்பாகத்தில் 200 மி.மீ மழையைக் கடந்துள்ளது. இது 2015ம் ஆண்டுக்குப்பின் அதிகபட்சமாகும்.
இன்றும், நாளை காலையும் கேடிசி எனப்படும் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக கடலோர மாவட்டங்களிலும் இன்று இரவு கனமழையை எதிர்பார்க்கலாம்.
தமிழகத்தின் கோவை, ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், சேலம், கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை பிற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.