தமிழகம்

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் 12 தொகுதியில் தனித்து போட்டி

செய்திப்பிரிவு

கோவையில் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்க வந்த பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சாரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உடுமலை இளைஞர் கொலை குறித்து பெரிய கட்சிகளின் தலைவர்கள் கருத்து ஏதும் சொல்லாதது கண்டிக்கத்தக்கது. தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் உரிமைக்காக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும், தாக்குதல் நடப்பதும் அதிகரிக்கிறது. இதை எதிர்க்க, நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை அம்பேத்கர் பிறந்த நாளில் இருந்து தொடங்க உள்ளோம். நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அசாம் மாநிலத்தில் இடதுசாரிகளுடன் இணைந்து போட்டியிடுகிறோம். கேரளத்தில் இடது சாரிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 இடங்களில் தனியாக போட்டியிடுகிறோம். போட்டியிடாத இடங்களில் மற்றவர்களை ஆதரிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT