தமிழகம்

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் ஏப்ரல் 3-ம் தேதி கும்பாபிஷேகம்: யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

செய்திப்பிரிவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஏப்ரல் 3-ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி யாகசாலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. பார்வதி தேவி மயில் வடிவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த தலம் என்று கூறப்படுகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும். இக்கோயிலுக்கு கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகள் நிறைவடைவதால், 2016-ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலாலயத்துடன் தொடங்கின. 6 மாத காலமாக திருப்பணிகள் நடந்துவந்தன. இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வரும் ஏப்ரல் 3-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

கபாலீஸ்வரர் கோயிலில் தற்போது நடந்து வரும் பங்குனித் திருவிழா வரும் 25-ம் தேதி யோடு நிறைவடைகிறது. அன் றைய தினமே கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் தொடங்குகின்றன. 25-ம் தேதி பந்தக்கால் நடுவது, விக்னேஸ்வர பூஜை, கும்பாபிஷேக லக்ன பத்திரிகை வாசித்தல் ஆகியவை நடக்கின்றன. 26-ம் தேதி முதல் ஹோமங்களுக்கான முன்னேற் பாட்டு பணிகள் நடக்கின்றன. 27-ம் தேதி காலை வாஸ்து சாந்தி பூஜை, ஆச்சாரியார்கள் பூஜை நடக்கின்றன.

முதல்கால யாகசாலை பூஜை கள் 28-ம் தேதி தொடங்குகின்றன. மார்ச் 29, 30, 31, ஏப்ரல் 1,2 என யாகசாலை பூஜை தொடர்ந்து நடக்கிறது. 12-ம் கால யாகசாலை பூஜை ஏப்ரல் 3-ம் தேதி காலை 5.30 மணிக்கு நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, அன்று காலை 7.45 மணிக்கு கலச புறப்பாடு நடக்கும்.

பின்னர் சரியாக காலை 8.45 9.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கற்பகாம்பாள் உட னாய கபாலீஸ்வரர் விமானம், சிங்காரவேலர், விநாயகர் என 19 விமான கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்படும். காலை 11 மணி அளவில் கபாலீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடத்தப்படும். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஏப்ரல் 3 முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடத்தப்படுகின்றன.

கும்பாபிஷேகத்தை முன் னிட்டு கோயில் உள் அலங்காரப் பணிகள், யாகசாலை அமைப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன.

SCROLL FOR NEXT