மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தமிழகம் முழுவதும் ‘மாற்று அரசியல் எழுச்சி பிரச்சாரப் பயணம்’ மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 2 கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ள அவர்கள், 3-வது கட்ட பிரச்சாரத்தை இன்று தொடங்கி 4-ம் தேதி வரை மேற்கொள்கின்றனர்.
ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், வேலூரில் அவர்கள் இன்று பிரச்சாரம் செய்கின்றனர். 2-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், 3-ம் தேதி அரூர், செங்கம், திருவண்ணாமலை, 4-ம் தேதி உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.