தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நவ. 7 முதல் விருப்ப மனு அளிக்கலாம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினர் நவ.7 முதல் 15-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்றுஅக்கட்சியின் தமிழகத் தலைவர்கே.அண்ணாமலை தெரிவித்துள் ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினரிடம் இருந்து நவ.7 முதல் 15-ம் தேதி வரை விருப்பமனுக்கள் பெறப்படும். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து 7-ம் தேதி மாலை 4 மணிக்கு விருப்ப மனுக்கள் பெறுவதை மாநிலத் தலைவர் தொடங்கி வைப்பார்.

சென்னை தவிர இதர 20 மாநகராட்சிகளிலும் மாநில நிர்வாகிகள்நேரில் சென்று விருப்ப மனுக்களைப் பெறவுள்ளனர். வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிகளில் மாவட்டத் தலைவர்கள் ஈடுபட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள முன்னாள் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT