தமிழகம்

தீபாவளி வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும்: டிடிவி தினகரன் வாழ்த்து

செய்திப்பிரிவு

தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும்.

கரோனா பெருந்துயரில் இருந்து முழுமையாக மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விரைவில் நனவாகட்டும். வலி தந்த இழப்புகள் மாறி, வலிமையையும் வளங்களையும் இத்திருநாள் கொண்டுவரட்டும்.

அகத்திலும், புறத்திலும் இருள் அகன்று அனைவரும் ஆனந்தமாக வாழ்ந்திட தீபாவளி நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT